சிம்புவின் சூப்பர்ஹிட் இரண்டாம் பாக படத்தை தயாரிக்கும் அஜித் பட நிறுவனம்

  • IndiaGlitz, [Friday,January 03 2020]

நடிகர் சிம்பு சமீபத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று வந்த பிறகு அவரது திரையுலக வாழ்வில் அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நீண்ட நாளாக கிடப்பில் போடப்பட்டிருந்த 'மாநாடு' திரைப்படம் வரும் 20ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் வரும் பொங்கல் தினத்தில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதுமட்டுமின்றி ஹன்சிகாவுடன் சிம்பு நடித்த ’மஹா’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி இணையதளங்களில் வைரலாகியது. சிம்பு ரசிகர்கள் சிம்புவின் அட்டகாசமான, ஸ்டைலான இந்த போஸ்டரை ரசித்து இணைய தளத்தில் அதிக அளவில் பகிர்ந்ததால் இந்த போஸ்டர் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது சிம்பு நடிப்பில் இயக்குனர் தரணி இயக்கிய ’ஒஸ்தி’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை அஜித் நடித்த ‘விவேகம்’, விஸ்வாசம் போன்ற படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் மூலம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுவதால் சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் இந்த ஆண்டு மட்டும் சிம்புவுக்கு மூன்று திரைப்படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

தந்தை வெற்றி பெற்ற உற்சாகத்தில் மகன் மரணம்: உள்ளாட்சி தேர்தல் சோகம்!

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பல சுவாரஸ்யங்களுடன் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு சோகமான சம்பவமும் நிகழ்ந்துள்ளது

மனைவியிடம் கோபம்: தனக்குத்தானே ஆணுறுப்பை அறுத்து கொண்ட சென்னை நபர்!

மனைவியிடம் சண்டை போட்ட ஏற்பட்ட கோபத்தில் கத்தியை எடுத்து தனக்குத்தானே தன்னுடைய ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட சென்னை நபர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இளைஞர்களின் ஆண்டாக மாறும் 2020: உள்ளாட்சி தேர்தலில் கல்லூரி மாணவி வெற்றி

மாணவர்கள் அரசியலைப் பற்றி தெரிந்து கொள்வது மட்டுமன்றி அரசியலில் ஈடுபட வேண்டும் என்றும் கமல்ஹாசன் உள்பட ஒரு சில சமூக அக்கறை உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் கூறிவரும் நிலையில்

ஸ்ரீவில்லிபுத்தூர், பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற துப்புரவு தொழிலாளி..!

துப்புரவு பணியாளராக பணியாற்றிய பெண் தனது அரசு வேலையை ராஜினாமா செய்து விட்டு பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

2 முறை தோல்வி. 3வது முறை ஜெயித்து ஊராட்சித் தலைவரான 79 வயது மூதாட்டி..!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் சுயேச்சையாக நின்ற 79 வயதான மூதாட்டி வெற்றிபெற்றிருக்கிறார்.