சிம்புவின் அடுத்த பட வியாபாரம் முடிந்தது: ரிலீஸ் எப்போது?
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடித்துவரும் ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது என்றும் அதே போல் அவர் நடித்து வரும் இன்னொரு படமான ’பத்து தல’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
மேலும் இந்த இரண்டு படங்களை முடித்துவிட்டு சிம்பு, ‘கொரோன குமார் என்ற படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் இந்த ஆண்டு இந்த மூன்று திரைப்படங்களும் வெளியாக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிம்பு நடித்து முடித்துள்ள படம் ’மஹா’ என்பது அனைவரும் அறிந்ததே. ஹன்சிகாவின் 50வது படமான இந்த படத்தை ஜமீல் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் ’மஹா’ படத்தின் தமிழக திரையரங்குகள் ரிலீஸ் உரிமையை ஆன்ஸ்கை என்ற நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் திரையரங்கு ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்பு, ஹன்சிகா, சந்தானம், தம்பி ராமையா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
EtceteraEntertainments proudly announcing that our upcoming release “MAHA”exclusive tamilnadu theatrical rightsbagged by“OnskyMedia TechnologyPvtLtd”@malikstreams @ihansika @SilambarasanTR_ @Etceteraenter @OnSkyoffl@Sureshmouttou @ghibranofficial @DoneChannel1
— Etcetera Entertainment (@Etceteraenter) January 25, 2022
@dir_URJameel pic.twitter.com/f67GeHImkF
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com