'மாநாடு' டீசர் ரிலீஸ் தேதி-நேரம் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Monday,February 01 2021]

சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது ’மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் வரும் 3ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் சிம்புவின் பிறந்தநாள் வருவதை அடுத்து அன்றைய தினம் சிம்பு ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக ’மாநாடு’ படத்தின் டீசர் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை சிம்புவும் தனது டுவிட்டரில் உறுதி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது மாநாடு டீஸர் பிப்ரவரி 3ஆம் தேதி 02.34 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 3ஆம் தேதி 2.34 மணியை எதிர்நோக்கி சிம்பு ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பதும் இப்போதே இந்த படத்தின் டீசர் குறித்த ஹாஷ்டாக் வைரலாக தொடங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் இந்த படத்தில் பாரதிராஜா, எஸ்ஜே சூர்யா, எஸ்ஏ சந்திரசேகர் உள்பட ஒரு நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறது என்பதும் வெங்கட்பிரபு இயக்கி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

பட்ஜெட் தாக்கலை அடுத்து தங்கம் விலை குறையுமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2021-2022 பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாகக் கூறி இருந்தார்.

கார்த்தியின் 'சுல்தான்': ரிலீஸ் தேதியுடன் வெளியான டீசர்

நடிகர் கார்த்தி நடித்து முடித்துள்ள 'சுல்தான்' திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது 

டி10 லீக் போட்டிகளில் ஒரு வரலாற்று சாதனை… ஒரு வீரரைப் பார்த்து மிரளும் ரசிகர்கள்!

அபுதாபியில் நடைபெற உள்ள 14  ஆவது ஐபிஎல் சீசன்  போட்டிகளுக்கு முன்னதாக அங்கு டி10 லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

நல்ல வாய்ப்பு கிடைத்தால் திரைப்படங்களில் மீண்டும் நடிப்பேன்; சீரியல் நடிகை ஸ்ரீதேவி!

தனுஷ் நடித்த 'புதுக்கோட்டையிலிருந்து சரவணன்' 'தேவதையை கண்டேன்' ஆகிய படங்களில் நடித்த நடிகை ஸ்ரீதேவி அசோக்,  தற்போது சீரியலில் பிசியாக நடித்து வருகிறார்.

மனைவியின் கர்ப்பத்தை டெலிவரி தேதியுடன் அறிவித்த மகத்!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகருமான மகத் தனது மனைவி பிராய்ச்சி கர்ப்பமாக இருப்பதை தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்து டெலிவரி தேதியையும் அறிவித்துள்ளார்