சிம்புவின் 'மாநாடு' சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படத்தில் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என ஏற்கனவே இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்திருந்த நிலையில் சற்று முன் இது குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது
‘மாநாடு’ திரைப்படத்தில் சிங்கிள் பாடல் ஜூன் 21 ஆம் தேதி வெளியாகும் என்று யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த தகவல் சிம்பு ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 2 முறை இந்த பாடலின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாக இருப்பதாக கூறப்பட்டு பின்னர் அது ஒத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ‘மாநாடு’ படத்தின் இசை வெளியீட்டு உரிமையை யுவன்சங்கர் ராஜாவின் ’யூ1 ரெக்கார்ட்ஸ் நிறுவனம்தான் பெற்றுள்ளது என்பது ஏற்கனவே அறிந்ததே.
சிம்பு நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் இந்த படத்தில் பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர் உள்பட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#maanaadufirstsingle #maanaadu #aVPpolitics #mashaAllah #abudulkhaliq #Silambarasan_TR #maanaadusinglefrom21st @vp_offl @SilambarasanTR_ @sureshkamatchi @madhankarky @U1Records on Twitter spaces pic.twitter.com/Hzxk4dPqyK
— Raja yuvan (@thisisysr) June 9, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments