சிம்புவின் 'மாநாடு' படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடிக்க உள்ள ‘மாநாடு’ திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்து படக்குழுவினர் படப்பிடிப்புக்கு செல்ல தயாராக உள்ளனர். இன்னும் ஒரு சில நாட்களில் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு கோவையில் நடைபெறும் என ஏற்கனவே செய்திகள் வெளிவந்தன.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தளத்தில் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் இந்த படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், எஸ்ஜே சூர்யா, ஒய்.ஜி. மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா உள்பட பலர் நடிக்கவுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகவிருக்கும் இந்த படம் ஒரு அதிரடி அரசியல் படம் என்பதும், சிம்பு இந்த படத்தில் ஒரு முஸ்லிம் கேரக்டரில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#Maanaadu shoot Starts on this feb 19th in a grand manner!
— sureshkamatchi (@sureshkamatchi) February 6, 2020
#STR@vp_offl @iam_SJSuryah @kalyanipriyan @johnmediamanagr
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com