செப்.31க்கு அப்புறம் நம்ம ஆட்டம் தான், தெறிக்க விடுவோம்: சிம்பு தயாரிப்பாளரின் டுவிட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு படத்தின் தயாரிப்பாளர் செப்டம்பர் 31ம் தேதிக்கு பிறகு நம்ம ஆட்டம்தான், தெறிக்க விடுவோம் என்று ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், உருவாகியுள்ள ’மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும், இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் ஆயுத பூஜை தினத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டாலும் அது குறித்த எந்தவித அறிவிப்பும் இல்லை என்பதும் புரமோஷன் பணிகள் இன்னும் தொடங்கவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் ’மற்ற அனைத்து நடிகர்கள் நடித்த படங்களின் அப்டேட் வந்து கொண்டிருக்கின்றது. ஆனால் சிம்பு நடித்த ’மாநாடு’ படத்தின் அப்டேட் மட்டும் ஏன் வரவில்லை என சுரேஷ் காமாட்சியிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள சுரேஷ் காமாட்சி, ‘வரும் தம்பி, வெயிட் அண்ட் ஸி, செப்டம்பர் 31க்கு பிறகு நம்ம ஆட்டம்தான், தெறிக்க விடுவோம்’ என்று கூறியுள்ளார். இதனை அடுத்து அடுத்த மாதம் முதல் ’மாநாடு’ படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ரசிகர் ஒருவர் செப்டம்பர் மாதத்தில் 31ம் தேதி இல்லையே அப்படி என்றால் அப்டேட்டே இல்லையா? என்றும் கிண்டலுடன் கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Varum thambi .wait and see ?? after sep 31 namma attamthan therikka viduvom ??
— sureshkamatchi (@sureshkamatchi) September 8, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com