'மாநாடு' டிரைலரை ரிலீஸ் செய்யும் 4 மொழி பிரபலங்கள்!

  • IndiaGlitz, [Wednesday,September 29 2021]

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’மாநாடு’. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ’மாநாடு’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’மாநாடு’ படத்தின் டிரைலர் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது குறித்த முழு விவரங்களை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

வரும் அக்டோபர் 2ஆம் தேதி 11:25 மணிக்கு நான்கு மொழிகளில் உள்ள பிரபலங்கள் நான்கு மொழிகளில் இந்த திரைப்படத்தின் டிரைலரை வெளியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ், தெலுங்கில் பிரபல நடிகர் நானி, கன்னடத்தில் பிரபல நடிகர் ரக்ஷித் ஷெட்டி மற்றும் மலையாளத்தில் பிரபல நடிகர் நிவின் பாலி ஆகியோர் நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் ’மாநாடு’ டிரைலரை வெளியிட உள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருக்கும் இந்த படத்தில் எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், மனோஜ், டேனியல், பிரேம்ஜி அமரன் உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அக்னி குஞ்சொன்று கண்டேன்: 'ருத்ர தாண்டவம்' படத்திற்கு பிரபல இயக்குனர் பாராட்டு!

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ருத்ரதாண்டவம் திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்த்த அரசியல்வாதிகள் சிலர் பாராட்டு தெரிவித்து

குஷ்புவை அடுத்து இளமைக்கு திரும்பும் கஸ்தூரி: வைரல் புகைப்படங்கள்!

நடிகை குஷ்பு சமீபத்தில் தனது உடல் எடையை குறைத்து 20 வருடங்களுக்கு முந்தைய குஷ்பு போல மாறியே ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்தார் என்பதும் அவருடைய ஸ்லிம்மான லேட்டஸ்ட்

'குக் வித் கோமாளி' அஸ்வினுக்கு உதவி செய்த அனிருத்!

'குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே கிட்டத்தட்ட பிரபலம் ஆகி விட்டார்கள் என்றும் அதில் பெரும்பாலானோருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து உள்ளது

'குறுக்கு வழியில்' போகும் சினேகன் மற்றும் சாக்சி அகர்வால்

பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளர் சினேகன் மற்றும்  பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர் சாக்சி அகர்வால் குறுக்கு வழியில் செல்ல இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது

இயக்குனர் நலன்குமாரசாமியின் அடுத்த படத்தில் பிரபல நடிகர்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த 'சூதுகவ்வும்' மற்றும் 'காதலும் கடந்து போகும்' ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் நலன் குமாரசாமி என்பது தெரிந்ததே.