'மாநாடு' படத்தில் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில், வெங்கட் பிரபு இயக்கி வரும் ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் நாளை சிம்புவின் பிறந்தநாள் வருவதை அடுத்து இந்த படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
நாளை மதியம் 02.34 மணிக்கு இந்த படத்தின் டீசர் அறிவிப்பு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் ஹிந்தி டீஸரை அனுராக் காஷ்யப் அவர்களும், கன்னட டீசரை சுதீப் அவர்களும், மலையாள டீசரை பிரதிவிராஜ் அவர்களும் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து ’மாநாடு’ படத்தின் தமிழ் டீசரை வெளியிடுவது யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது அதற்கும் விடை கிடைத்துள்ளது. இந்த படத்தின் தமிழ் டீசரை ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் அவர்கள் ரிலீஸ் செய்ய இருப்பதாக சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிம்பு நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ‘பத்து தல’ படத்திற்கு இசையமைப்பது ஏ.ஆர்.ரஹ்மான் தான் என்பது தெரிந்ததே.
Wait is over #MaanaaduTeaser (Tamil) wl b revealed by our very own iconic IsaiPuyal @arrahman 2:34pm tomrw.Thank you so much sir for doing this for us. #maanaadu #maanaaduteaser #AvpPolitics@SilambarasanTR_@vp_offl @thisisysr @kalyanipriyan @iam_SJSuryah@johnmediamanagr pic.twitter.com/YrkmVlfsVR
— sureshkamatchi (@sureshkamatchi) February 2, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com