சிம்புவின் 'மாநாடு' தொடங்கும் தேதி குறித்த தகவல்

  • IndiaGlitz, [Saturday,June 08 2019]

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'மாநாடு' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அடுத்து படப்பிடிப்பை ஆரம்பிக்க படக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில் 'மாநாடு' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வரும் 25ஆம் தேதி முதல் மலேசியாவில் தொடங்கவுள்ளது. இதற்காக விரைவில் சிம்பு, வெங்கட்பிரபு உள்பட படக்குழுவினர் அனைவரும் விரைவில் மலேசியா செல்லவுள்ளனர்.

அரசியல் த்ரில் திரைப்படமான இந்த படத்திற்காக நடிகர் சிம்பு சமீபத்தில் வெளிநாடு சென்று தனது உடல் எடையை குறைத்து திரும்பியுள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் நாயகி உள்பட படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகவும் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
 

More News

'8 தோட்டாக்கள்' தயாரிப்பாளரின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்!

கோலிவுட் திரையுலகின் இளம் இயக்குனர்களில் ஒருவர் '8 தோட்டாக்கள்' இயக்குனர் ஸ்ரீகணேஷ். பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவான 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தில் உதவி இயக்குனராக

மீண்டும் ரஜினி டைட்டில் படத்தில் நடிக்கும் ஜிவி பிரகாஷ்

கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு ஆண்டும் அதிக திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்த 'சர்வம் தாளமயம்', 'குப்பத்து ராஜா' மற்றும் வாட்ச்மேன் ஆகிய திரைப்படங்கள்

சூர்யாவுடன் விசிலடித்து குத்தாட்டம் போட்ட விஜய்சேதுபதி! வைரலாகும் வீடியோ

நடிகர் விஜய்சேதுபதி நடித்து வரும் படங்களில் ஒன்று 'சிந்துபாத். இந்த படம் இம்மாத இறுதியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது

பெரிய ரிக்சாக்காரன் எம்ஜிஆரு? யோகிபாபு கலாய்ப்பில் 'ஜாம்பி' டீசர்

யோகிபாபு, யாசிகா ஆனந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஜாம்பி' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

 24 மணி நேரமும் திரையரங்குகளில் சினிமா! தமிழக அரசு அனுமதி

முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும்போது அதிகாலை காட்சி திரையிடுவதற்கே அரசின் அனுமதியை பெற வேண்டிய கட்டாயம் இருந்தது.