சிம்புவின் 'மாநாடு' படப்பிடிப்பு எப்போது? தயாரிப்பாளர் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Wednesday,October 07 2020]

சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வந்த ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய மாநில அரசுகள் படப்பிடிப்புக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில் ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கப்படும் என சிம்பு ரசிகர்கள் இடையே கேள்வி எழுந்தது.

அது மட்டுமின்றி சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் இருந்ததால் ’மாநாடு’ படப்பிடிப்பும் தள்ளிப்போகுமா? என்ற அச்சமும் ரசிகர்கள் மனதில் இருந்தது. இதனை அடுத்து தற்போது சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தளத்தில் ’மாநாடு’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது என்பதை அறிவித்து உள்ளார்.

தடைகளை உடைத்து, பாதிப்புகள் கடந்து, ’மாநாடு’ நவம்பர் முதல் வாரம் படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவித்துள்ளார். இதனை அடுத்து ’மாநாடு’ படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க உள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.