அட்டகாசமான 'மாநாடு' பர்ஸ்ட்லுக்: சிம்பு ரசிகர்களுக்கு தரமான சம்பவம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய ’ஈஸ்வரன்’ படத்தின் டீசர் தீபாவளி விருந்தாக வெளிவந்த நிலையில் அவர் நடித்து வரும் இன்னொரு திரைப்படமான’மாநாடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நவம்பர் 21 ஆம் தேதி 10.44 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் சற்றுமுன் சிம்புவின் சமூக வலைத்தள பக்கத்தில் அட்டகாசமான ‘மாநாடு’ ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது. அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞர் கேரக்டரில் நடித்து வரும் சிம்பு, இஸ்லாமிய தோற்றத்துடன் தலையில் ரத்தம் வழிந்து கொண்டிருக்கும் நிலையிலும் தொழுகை செய்வது போல் இருக்கும் இந்த மாஸ் போஸ்டர் உண்மையில் சிம்புவின் ரசிகர்களுக்கு தரமான சம்பவமாகவே கருதப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வந்த ஃபர்ஸ்ட்லுக் புரமோ போஸ்டரில் இஸ்லாமிய இளைஞர் வேடத்தில் சிம்பு துப்பாக்கியை அருகில் வைத்துக்கொண்டு தொழுகையில் இருப்பது போன்றும், பின்னணியில் அரசியல் கலவரம் நடப்பது போன்றும் இருந்தது என்பது தெரிந்ததே.
சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, எஸ்.ஏ.சந்திரசேகர், உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். யுவன்ஷங்கரின் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.
#MashaAllah#Maanaadu First Look #STR #SilambarasanTR #vp09 #maanaadu #maanaadufirstlook #abdulkhaaliq #aVPpolitics@vp_offl@iam_SJSuryah @sureshkamatchi @thisisysr @Richardmnathan @kalyanipriyan @Premgiamaren @Cinemainmygenes @silvastunt@storyteller_ind @tuneyjohn pic.twitter.com/Xb4By0DRoS
— Silambarasan TR (@SilambarasanTR_) November 21, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments