'மாநாடு' படத்தின் இரண்டு நாள் வசூல் இத்தனை கோடியா? சுரேஷ் காமாட்சி தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் ரிலீசுக்கு முன்னர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தது என்பதும் ஒரு கட்டத்தில் ரிலீசுக்கு முந்தைய தினத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறும் அளவுக்கு இந்த படத்தின் பிரச்சனை உச்சகட்டமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் அனைத்து பிரச்சனைகளை சமாளித்து திட்டமிட்டபடி நேற்று முன்தினம் ’மாநாடு’ திரைப்படம் ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படத்திற்கு அடாது மழையிலும் தியேட்டர்களில் ரசிகர்கள் குவிந்து வருவதால் வசூல் மழையும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ’மாநாடு’ திரைப்படத்தின் வசூல் குறித்து பலர் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் சுரேஷ் காமாட்சி சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் ’மாநாடு’ திரைப்படத்தின் இரண்டு நாள் வசூல் ரூபாய் 14 கோடி என்று அறிவித்துள்ளார்.
இந்த தகவல் சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. இன்னும் ஹவுஸ்புல் காட்சிகளாக அனைத்து திரையரங்குகளிலும் இந்த படம் ஓடிக் கொண்டிருப்பதால் இந்த படத்தின் வசூல் பெரிய சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2days tn theatrical collection 14 cr #maanaaduBlockbuster
— sureshkamatchi (@sureshkamatchi) November 27, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com