நான் மட்டும் தனியா இருக்கேன், நீ மட்டும் ஜாலியா இருந்தா நியாயமா? சிம்புவின் காதலர் தின வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிம்பு காதலர் தினத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள காமெடி வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
இதில் சிம்பு தனது முன்னே உட்கார்ந்து இருக்கும் நாயை நோக்கி அவர் கூறுவது இதுதான்: இப்பொழுதுதான் நீ வளர்ந்து வந்துள்ளாய். இனிமேல் நீ ஒரு பையனை மீட் பண்ண வேண்டும், அந்த பையனுடன் உனக்கு சில விஷயங்கள் எல்லாம் நடக்க வேண்டும். அதுக்கு எனக்கு முதலில் கல்யாணம் ஆக வேண்டும். புரிகிறதா?
நான் மட்டும் தனியாக இருக்கிறேன், நீ மட்டும் ஜாலியாக இருக்கிறாய் என்றால் அது நியாயம் கிடையாது. அதனால் நான் என்ன சொல்கிறேன் என்றால் நீ இரவெல்லாம் உட்கார்ந்து யோசிக்க வேண்டும். இந்த மாதிரி சிம்புவுக்கு கல்யாணம் ஆக வேண்டும், அப்போதுதான் நாம் நம் வாழ்க்கையில் ஜாலியாக இருக்க முடியும், இல்லையென்றால் இருக்க முடியாது என்று. அதன் பிறகு நீ என்னிடம் கோபித்துக் கொள்ளக்கூடாது. புரிந்ததா? என் கஷ்டம் உனக்கு புரிகிறதா இல்லையா? ஏதாவது சொல்லு மேன், ஓ நீ கேர்ள் அல்லவா? என்று காமெடியுடன் அவர் பதிவு செய்துள்ள இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout