சிம்புவின் 'பில்லா 3' படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,July 26 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித் நடித்த 'பில்லா' படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் 'பில்லா 3' படம் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன் செய்தி வெளியானது. இந்த செய்தியை சிம்புவும் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த படத்தை விஷ்ணுவர்தன் இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்தை சிம்புவே தயாரித்து இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் 'பில்லா 3' படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறவுள்ளதாகவும், இதற்காக சிம்பு வரும் ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபரில் தொடங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் சிம்பு அமெரிக்கா செல்லும் முன்பே இந்த படத்தின் டீசரை வெளியிடவும் படக்குழு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.