பீப் பாடல் விவகாரம்: சிம்பு மீதான வழக்கில் அதிரடி உத்தரவு!

  • IndiaGlitz, [Wednesday,February 16 2022]

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிம்புவின் பீப் பாடல் குறித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு பீப் பாடல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து நடிகர் சிம்புவுக்கு எதிராக கோவை ரேஸ்கோர்ஸ் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

கோவை மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கையில் சிம்புவுக்கு எதிரான புகாருக்கு ஆதாரம் இல்லை என்பதால் வழக்கு ரத்து செய்யப்படுவதாக நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்

பீப் பாடல் விவகாரம் குறித்து மாதர் சங்கம் உள்ளிட்ட ஒருசில அமைப்புகள் சிம்பு மீது கடுமையான விமர்சனம் வைத்த நிலையில் தற்போது அந்த வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

சிகிச்சை பெற்று வரும் மூதாட்டிக்கு மருந்தாக உதவிய 'அரபிக்குத்து' பாடல்” வைரல் வீடியோ!

 விஜய் படத்தின் பாடல் என்றால் உறுதியாக ஹிட்டாகி விடும் என்பதும் 6 முதல் 60 வயது வரை உள்ள அனைவருக்கும் பிடித்த பாடலாக அது மாறிவிடும் மேஜிக் என்பதையும் கடந்த சில ஆண்டுகளாக

ராஷ்மிகா மந்தனாவுக்கு திருமணமா? அவரே அளித்த விளக்கம்!

பிரபல தெலுங்கு நடிகருடன் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு திருமணம் என வதந்திகள் பரவி வரும் நிலையில் தனது திருமணம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் ராஷ்மிகா மந்தனா விளக்கமளித்தார். 

அரபிக்குத்து' பாடலுக்கு செம ஆட்டம் போட்ட 'பிக்பாஸ் சீசன் 5' போட்டியாளர்!

தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான திரைப்படம் 'பீஸ்ட்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீசாகும்

இதற்கு முன் எங்கே பார்த்தேன்? மகனுடன் தனுஷ் இருக்கும் மாஸ் புகைப்படம்

நடிகர் தனுஷ் சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'இதற்குமுன் நான் எங்கே பார்த்தேன் இதை' என்ற கேள்வி குறியுடன் மகனுடன் இருக்கும் மாஸ் புகைப்படத்தை பதிவு செய்துள்ள

கிங் பட்டியலில் இணைந்த எலான் மஸ்க்… ஏழைகளுக்காக எடுத்த அதிரடி முடிவு!

உலகின் முதல்தர வரிசை பணக்காரராக இருந்துவரும் எலான் மஸ்க் தன்னுடைய கால்வாசி பங்குகளை கடந்த ஆண்டு விற்பனை