close
Choose your channels

'சிம்பு 48' படமே இன்னும் தொடங்கவில்லை.. அதற்குள் 'சிம்பு 49' படம் குறித்த தகவல்..!

Sunday, June 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிம்பு நடிக்க இருக்கும் 48வது திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாகவும் உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் வெளியான தகவலை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படத்தில் சிம்புவின் கேரக்டர் மிகவும் வித்தியாசமானது என்பது மட்டுமின்றி உடலளவில் அவர் தயாராக வேண்டும் என்பதற்காக லண்டனில் அவர் மார்ஷியல் கலைகளை பயின்று வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிம்பு 48வது திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சிம்புவின் 49 வது படம் குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது.

சிம்பு தனது அடுத்த படத்திற்கான கதைகளை பல இயக்குனர்களிடம் கேட்டதாகவும் அதில் ஒரு பிரபல இயக்குனரின் கதையை தேர்வு செய்து முடிவு செய்து விட்டதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு அவர் லண்டனில் இருந்து சென்னை திரும்பியதும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிம்புவின் 48வது படத்தின் நாயகி குறித்த தகவல்கள் கசிந்து வருகின்றன. தீபிகா படுகோனே, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள் என்று கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் ’கங்குவா’ நாயகி வேடத்திற்கு திஷா பதானியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் நாயகி குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment