தயவுசெய்து நிறுத்திக் கொள்ளுங்கள்: ஊடகங்களுக்கு சிம்பு வேண்டுகோள்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் இழந்த தன்னுடைய புகழை மீண்டும் மீட்க அவர் 'கெட்டவன்' படத்தை மீண்டும் தொடங்கவுள்ளதாகவும், 'பில்லா 3' படத்தை தயாரித்து இயக்கவுள்ளதாகவும் அதிகாரபூர்வமற்ற செய்திகள் வெளிவந்தன.
இந்த நிலையில் சற்று முன் சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். அதில் 'தயவுசெய்து எனது அடுத்த படம் குறித்த ஊகங்களை நிறுத்தி கொள்ளுங்கள். என்னுடைய அடுத்த படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுமை காக்கவும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
'கெட்டவன்' மற்றும் 'பில்லா 3' ஆகிய இரண்டு படங்களுமே சிம்புவின் மனதில் இருந்தாலும் இவற்றில் எதை முதலில் தேர்வு செய்வது என்பது குறித்து சிம்பு இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், விரைவில் அவருடைய படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
Kind & humble request to media, pls stop speculating about my next project. Thanks for your support and pls wait for official announcement.
— STR (@iam_str) July 27, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments