சிம்புவின் 10 நிமிட மெளன போராட்டம். கருப்பு சட்டையுடன் குவிந்த ரசிகர்கள்

  • IndiaGlitz, [Thursday,January 12 2017]

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிம்பு இன்று மாலை 5 மணிக்கு கருப்பு சட்டை அணிந்து தனது வீட்டின் முன் பத்து நிமிடங்கள் மெளன போராட்டம் நடத்தவுள்ளதாக நேற்று அறிவித்தார்.


அதன்படி இன்று சரியாக ஐந்து மணிக்கு தனது தி.நகர் வீட்டின் முன் கருப்புச்சட்டையுடன் தோன்றினார். அவருடன் தந்தை டி.ராஜேந்தர், தாயார் உஷா ஆகியோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்.


சிம்புவின் இந்த மெளன போராட்டத்தில் அவருடைய நூற்றுக்கணக்கான ரசிகர்களும் கலந்து கொண்டனர். அதுமட்டுமின்றி சிம்புவின் வேண்டுகோளை ஏற்று சென்னையில் பல இடங்களில் மாலை ஐந்து மணிக்கு பலர் கருப்புச்சட்டையுடன் தங்கள் வீட்டின் முன் நின்று மெளன போராட்டம் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.