முடிவுக்கு வந்தது சிம்புவின் அடுத்த படம்: ரிலீஸ் எப்போது?

  • IndiaGlitz, [Friday,October 30 2020]

நடிகர் சிம்பு கடந்த சில வாரங்களாக கேரளாவில் தீவிரமாக உடற்பயிற்சி செய்து உடலை ஸ்லிம் ஆக்கி உள்ளார் என்பதும் அவருடைய லேட்டஸ்ட் போட்டோஷூட்டை பார்த்த ரசிகர்கள் கடந்த பத்து வருடங்களுக்கு முன் பார்த்த சிம்புவை தற்போது பார்ப்பது போலிருக்கிறது என தெரிவித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது அவர் சுசீந்தரன் இயக்கத்தில் உருவாகிவரும் ’ஈஸ்வரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பதும், வரும் பொங்கல் தினத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் நவம்பர் முதல் வாரம் முதல் சிம்பு நடிக்கும் இன்னொரு திரைப்படமான ’மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அதனை அடுத்து அவர் ’முஃப்தி’ என்ற கன்னட படத்தின் ரீமேக்கில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் ஹன்சிகாவின் 50-வது திரைப்படமான ’மஹா’ என்ற திரைப்படத்தில் சிம்பு நடித்து வந்தார் என்பது தெரிந்ததே. அந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்

மேலும் படப்பிடிப்பு முடிவடைந்தததை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி அதனைக் கொண்டாடி உள்ளனர் என்பதும் இந்த கொண்டாட்டத்தில் ஹன்சிகாவும் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பதும், ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்இட ஒதுக்கீடு… அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!!!

மருத்துவப் படிப்பில் சேர தமிழகத்தில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் 7.5% உள்இட

19 வயது பெண்ணிடம் மயங்கிய சூர்யகுமார் யாதவ்: காதல் தோன்றியது எப்படி?

கடந்த இரண்டு நாட்களாக சூர்யகுமார் யாதவ் குறித்த செய்திகள்தான் அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே.

யார் யாரு என்ன செய்றிங்கன்னு எனக்கு தெரியும்: நெத்தியடி அடித்த ஆரி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினந்தோறும் ஆட்டம், பாட்டம், கூத்து, கொண்டாட்டம் மற்றும் செண்டிமெண்ட் இருந்தாலும் சண்டை சச்சரவு என்பது இல்லாமல் அன்றைய நாள் முடிவதில்லை. 

இன்னொரு பூமியா??? நாசா வெளியிட்ட தெறிக்கவிடும் தகவல்!!!

உயிரினங்கள் (மனிதன், விலங்கு…) பூமியைத் தவிர வேறு எந்த கிரகத்திலாவது வாழுகிறதா என்பது குறித்த ஆர்வம் எல்லோருக்கும் இருக்கதான் செய்கிறது.

ஏ.ஆர் ரஹ்மான் இசையில் பாடும் தனுஷ்: பரபரப்பு தகவல்!

ஏஆர் ரஹ்மான் இசையில் தனுஷ் ஒரு பாடலை பாட இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து தனுஷூம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார்