முடிவுக்கு வந்தது சிம்புவின் அடுத்த படம்: ரிலீஸ் எப்போது?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிம்பு கடந்த சில வாரங்களாக கேரளாவில் தீவிரமாக உடற்பயிற்சி செய்து உடலை ஸ்லிம் ஆக்கி உள்ளார் என்பதும் அவருடைய லேட்டஸ்ட் போட்டோஷூட்டை பார்த்த ரசிகர்கள் கடந்த பத்து வருடங்களுக்கு முன் பார்த்த சிம்புவை தற்போது பார்ப்பது போலிருக்கிறது என தெரிவித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது அவர் சுசீந்தரன் இயக்கத்தில் உருவாகிவரும் ’ஈஸ்வரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பதும், வரும் பொங்கல் தினத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
மேலும் நவம்பர் முதல் வாரம் முதல் சிம்பு நடிக்கும் இன்னொரு திரைப்படமான ’மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அதனை அடுத்து அவர் ’முஃப்தி’ என்ற கன்னட படத்தின் ரீமேக்கில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் ஹன்சிகாவின் 50-வது திரைப்படமான ’மஹா’ என்ற திரைப்படத்தில் சிம்பு நடித்து வந்தார் என்பது தெரிந்ததே. அந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்
மேலும் படப்பிடிப்பு முடிவடைந்தததை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி அதனைக் கொண்டாடி உள்ளனர் என்பதும் இந்த கொண்டாட்டத்தில் ஹன்சிகாவும் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பதும், ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது
Hello Makkale!! We are very happy & excited to announce the wrap of #Maha an @ihansika 50th film produced by @MathiyalaganV9 @Etceteraenter & @malikstreams it been a great journey with this lovely team and to mention and big ton of thanks to our beloved @silambarasanTRS pic.twitter.com/L9G5ooZiz2
— Etcetera Entertainment (@Etceteraenter) October 29, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com