சென்றாயனுக்கு சிம்பு கொடுத்த 'மந்திர' புத்தகம்

  • IndiaGlitz, [Tuesday,September 11 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக வருவார் என்று மக்கள் எதிர்பார்த்த போட்டியாளர் சென்றாயன். கடந்த வாரம் இவர் மக்களின் எதிர்ப்பை மீறி வெளியேற்றப்பட்டார். இவருடைய வெளியேற்றத்திற்கு கமல் கூறிய காரணம் குழந்தைத்தனமாக இருந்ததாக சமூக வலைத்தள பயனாளிகள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினாலும் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற சென்றாயன், வெளியே வந்தவுடன் மகத்துடன் இணைந்து நடிகர் சிம்புவை சந்தித்துள்ளனர். மகத் வீட்டில் நடந்த இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்களை மகத் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது சென்றாயனுக்கு திருமூலர் எழுதிய 'திருமந்திரம்' புத்தகத்தை பரிசாக கொடுத்ததுடன் அந்த புத்தகத்தில் தனது கையெழுத்தையும் சிம்பு போட்டுள்ளார்.