25 லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்களை 'ஈஸ்வரன்' படக்குழுவினருக்கு பரிசளித்த சிம்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ‘ஈஸ்வரன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் சிம்புவின் திரையுலக வரலாற்றில் 40 நாட்களில் ஒரு படம் முடிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ‘ஈஸ்வரன்’ படக்குழுவினருக்கு பரிசளித்து நடிகர் சிலம்பரசன் மகிழ்வித்த செய்தி தற்போது வெளிவந்துள்ளது. நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து நடிகர் சிலம்பரசன் ‘ஈஸ்வரன்’ படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தீபாவளி பரிசுகளை வழங்கினார்.
இப்படத்தில் பணியாற்றியவர்கள் 400 பேருக்கும் ஒரு கிராம் தங்கம், வேட்டி சேலை, இனிப்புகள் என தீபாவளி பரிசு வழங்கி அனைவரையும் மகிழ்வித்தார். மேலும் படத்தில் நடித்த துணை நடிகர்கள் 200 பேருக்கு வேட்டி சேலை, இனிப்புகள் வழங்கினார். மேலும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களுடன் பரிசுகளையும் அளித்து இன்ப அதிர்ச்சியை அளித்த நடிகர் சிலம்பரசனுக்கு படக்குழுவினர் அனைவரும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்
ஈஸ்வரன் படக்குழுவினருக்கு பரிசளித்து மகிழ்வித்த நடிகர் சிலம்பரசன்
— Diamond Babu (@idiamondbabu) November 7, 2020
நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து நடிகர் சிலம்பரசன் ‘ஈஸ்வரன்’ படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தீபாவளி பரிசுகளை வழங்கினார். pic.twitter.com/WM5kAKK6D6
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com