close
Choose your channels

பிறந்தநாளில் மறக்க முடியாத பரிசு பெற்ற நடிகர் சிம்பு!

Friday, February 4, 2022 • தமிழ் Comments
STR
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிம்பு நேற்று தன்னுடைய 39 ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக துபாய் சென்றிருந்ததாகவும் அங்கு அவருக்கு கோல்டன் விசா வழங்கி துபாய் அரசு சிறப்பித்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வப் புகைப்படம் எதுவும் வெளிவராத நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

துபாய் அரசு சமீபத்தில் தென்னிந்திய நடிகர், நடிகைகளுக்கு தங்களுடைய கோல்டன் விசாவை தொடர்ந்து வழங்கி சிறப்பித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நடிகை த்ரிஷா, லட்சுமி ராய், மீரா ஜாஸ்மின், அமலாபால், நடிகர் பார்த்திபன் போன்றோருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்ட நிலையில் தற்போது நடிகர் சிம்புவுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் கோல்டன் விசாவை பெற்றுக்கொண்டு நடிகர் சிம்பு துபாயிலேயே தனது பிறந்தநாளை கொண்டாடியதாகவும் ஒரு தகவல் கூறப்படுகிறது.

இதைத்தவிர அவருடைய பிறந்தநாளையொட்டி நேற்று “பத்து தல“ திரைப்படத்தின் படக்குழு சிறப்பு போஸ்டர் மற்றும் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டு இருந்தது. இதில் சிம்பு ஏஜிஆர் கேங்ஸ்டராக நடிக்க இருப்பதைப் பார்த்த ரசிகர்கள் கடும் உற்சாகத்தை வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில் நடிகர் சிம்பு துபாய் அரசிடம் இருந்து கோல்டன் விசாவை பெற்றிருப்பதாகத் தகவல் கூறப்படும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சிம்பு தற்போது இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் “பத்து தல“, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் “வெந்து தணிந்தது காடு”, கோகுல் இயக்கத்தில் “கொரோனா குமார்“ போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment