அமெரிக்காவில் இருந்து இந்தியா வரும் வழியில் சிம்புவுக்கு கிடைத்த கிஃப்ட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிம்புவின் தந்தையும் இயக்குனருமான டி ராஜேந்தர் அமெரிக்காவில் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய சிகிச்சைக்கு முழு ஏற்பாடுகளை செய்த சிம்பு தற்போது அவர் குணமாகி வருவதை அடுத்து இந்தியாவுக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியானது.
இன்று நிலையில் இந்தியாவுக்கு வரும் வழியில் அவர் துபாயில் இறங்கியதும் அங்கு அவருக்கு ஒரு சர்ப்ரைஸ் கிஃப்ட் காத்திருந்தது. அவருக்கு ஐக்கிய அரபு எமிரேட் அரசு கோல்டன் விசா கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவிற்கு ஐக்கிய அரபு எமிரேட் அதிகாரிகள் கோல்டன் விசா கொடுத்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் உலக நாயகன் கமலஹாசனுக்கு கோல்டன் விசா கிடைத்த நிலையில் அடுத்ததாக நடிகர் சிம்புவுக்கு கோல்டன் விசா கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தியா திரும்பும் சிம்பு முதல் கட்டமாக ’பத்து தல’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் அதன்பிறகு ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டிராஜேந்தர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
SilambarasanTR got his Golden visa from uae #Simbu #str @SilambarasanTR_ pic.twitter.com/7c4L6bcdcD
— Cinema Updates (@mastervijay2020) July 2, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments