சிம்புவின் 'பத்து தல' ரிலீஸ் தேதி: ஹாட்ரிக் வெற்றி உறுதியா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் செப்டம்பர் 15ம் தேதியும், சிம்பு நடித்த இன்னொரு திரைப்படமான ’மஹா’ திரைப்படம் ஜூலை 22ம் தேதியும் ரிலீஸ் ஆக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் சிம்பு நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றான ‘பத்து தல’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ’முப்தி’ என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக் படமான ‘பத்து தல’ படத்தில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ளனர். சிம்பு கேங்க்ஸர் கேரக்டரிலும், கௌதம் கார்த்திக் காவல்துறை அதிகாரி கேரக்டரிலும் நடித்திருக்கும் இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர்.
சூர்யா-ஜோதிகா நடித்த ’சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணா இந்த படத்தை இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சிம்பு அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் படமாக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சற்று முன்னர் ‘பத்து தல’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் டிசம்பர் 14ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த ஆண்டு வெளியான சிம்புவின் ‘மாநாடு’ மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இனி வரவிருக்கும் மாதங்களில் சிம்புவின் மேலும் 3 படங்கள் வெளியாக உள்ளதால் ஹாட்ரிக் வெற்றி உறுதி என அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
The power-packed #SilambarasanTR & #GauthamKarthik Starrer #PathuThala Releasing worldwide In Theatres on December 14th, 2022. #Atman #PathuThalaFromDec14@StudioGreen2 @Kegvraja @PenMovies @jayantilalgada @SilambarasanTR_ @Gautham_Karthik @arrahman @nameis_krishna pic.twitter.com/lHNZE3pRHp
— Studio Green (@StudioGreen2) June 30, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments