சிம்புவின் 'வல்லவன்' ரீரிலீஸ் படத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்த ரசிகர்கள்.. அன்-கட் வெர்ஷனா?

  • IndiaGlitz, [Wednesday,December 20 2023]

சிம்பு நடித்து இயக்கிய ‘வல்லவன்’ திரைப்படம் சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் அந்த படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக ஏற்கனவே ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற படங்கள் மீண்டும் ரிலீஸ் ஆகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். கமலஹாசனின் ’ஆளவந்தான்’ ரஜினியின் ’முத்து’ சூர்யாவின் ’வாரணம் ஆயிரம்’ தனுஷின் சில படங்கள் ரீ ரிலீஸ் ஆகி வருகின்றன.

அந்த வகையில் சிம்பு, நயன்தாரா நடிப்பில் சிம்புவின் இயக்கத்தில் உருவான ’வல்லவன்’ திரைப்படம் சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் 2006ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனபோது இல்லாத பல காட்சிகள் இருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்தனர்.

எனவே இந்த படம் அன்-கட் வெர்ஷனாக வெளியாகி இருக்கலாம் என்று ரசிகர்கள் மத்தியில் கருத்துக்கள் பரவியது. ஆனால் படக்குழுவினர் இதுகுறித்து கூறிய போது, ‘ இந்த படத்தின் உண்மையான நீளம் இதுதான் என்றும் ஆனால் ரிலீஸ் நேரத்தில் இந்த படத்தின் சில காட்சிகள் கட் செய்யப்பட்டதாகவும் தற்போது எந்தவித கட் இல்லாமல் முழுமையான படம் ரிலீஸ் ஆகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2006ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன போது இல்லாத பல காட்சிகள் தற்போது ரீரிலீசில் இருப்பதை பார்த்து சிம்பு ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஷ்ணுவோட அக்கா என்னை முறை முறைன்னு முறைக்கிறாங்க.. 3 போட்டியாளர்கள் புலம்பல்..!

 பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் உறவினர்கள் வருகை தரும் வாரம் என்ற நிலையில் ஒவ்வொரு போட்டியாளர்களின் உறவினர்கள் வந்து கொண்டிருக்கின்றனர் என்பதை பார்த்தோம்.

'தங்கலான்' புதிய ரிலீஸ் தேதி இதுவா? 3 நாட்கள் தொடர் விடுமுறையால் குஷி..!

விக்ரம் நடித்த  'தங்கலான்' திரைப்படம் ஜனவரி இறுதியில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் செய்து தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இவங்க மொறைக்கிறாங்க.. என்னை அடிப்பாங்கன்னு நினைக்கிறேன்: விஷ்ணு உறவினர் குறித்து பூர்ணிமா

நான் விஷ்ணுவிடம் சரியாக பேசியதே இல்லை என்று பூர்ணிமா கூற அதற்கு விஷ்ணுவின் உறவினர் முறைக்க 'இவங்க என்ன அடிப்பார்கள் என்று நினைக்கிறேன்,

கார்த்திக் நரேன் அடுத்த படத்தின் சென்சார் தகவல். .ரிலீஸ் எப்போது?

தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த படத்தின் சென்சார் தகவல்கள் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

'தளபதி 68' டைட்டில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அர்ச்சனா கல்பாத்தி.. என்ன சொல்லியிருக்கிறார்?

 தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 68' படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகின்றன.