சிம்புவை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து கூறிய அனிதா: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசனுக்கு இணையாக சிம்பு சிறப்பாக தொகுத்து வழங்கி வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் சிம்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அனிதா கூறிய ஒரு கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 14 போட்டியாளர்களுடன் தொடங்கி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கமல்ஹாசனை அடுத்து சிம்பு இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார் என்றும், இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமான பாணியில் அவர் போட்டியாளர்களை அன்புடன் அரவணைத்து, அதே நேரத்தில் கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்து தொகுத்து வழங்கி வருவதாக கருத்துக்கள் எழுந்து உள்ளது
இந்த நிலையில் சிம்பு குறித்து சுருதியுடன் அனிதா பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அனிதா கூறியிருப்பதாவது: “நீ பேசுனது ரொம்ப ஆழமான விஷயம் இதெல்லாம் சிம்புவுக்கு புரியாது. அவர் அதுபற்றி யோசிக்கவும் மாட்டார். ஏன்னா அவர் பிக்பாஸுக்கு புதுசு. கமல் சாருக்கு இதெல்லாம் புரிஞ்சிருக்கும். அவர் 5 சீசன் ஹோஸ்ட் பண்ணி இருக்கார்’ என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்து சிம்பு ரசிகர்கள் இந்த வாரம் அனிதாவை வெளியேற்ற வேண்டும் என்று கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர். கடந்த சீசனில் ஆரியை சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அனிதாவை அடுத்த வாரமே ரசிகர்கள் வெளியேற்றியது போல் இந்த வாரமும் வெளியேற்றுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Ivanga romba depth ana point sonnangalam athu STR ku puriyatham! ??????♀️#BiggBossTamil #BBUltimate #BiggBossUltimate pic.twitter.com/YuIZPt6Sp2
— Stone Heart (@Stonecoldhrt) March 13, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com