உறவுக்கார பெண்ணுடன் நிச்சயதார்த்தமா? சிம்பு விளக்கம்
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
நடிகர் சிம்புவுக்கு அவரது தாயார் உறவுக்கார பெண் ஒருவரை பார்த்துள்ளதாகவும், அந்த பெண்ணுடன் சிம்புவின் திருமணம் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருப்பதாகவும் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களிலும் இணையதளங்களிலும் செய்திகள் பரவி வந்தன.
இந்த நிலையில் நடிகர் சிம்பு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திரையுலகில் பிரபலமாக உள்ள கலைஞர்கள் தினமும் பலரை சந்திப்பது தவிர்க்க முடியாதது. அதை வைத்து அவர்களின் சொந்த வாழ்க்கையை இணைத்து பேசக்கூடாது. கற்பனையான தகவல்களை செய்திகளாக வெளியிட கூடாது. என் திருமணத்தை பற்றி வெளியான தகவல்களில் உண்மையில்லை. அந்த வதந்தியை யாரும் நம்பவேண்டாம். என் திருமணத்தை முன்கூட்டியே நானே அறிவிப்பேன். ரசிகர்களும், பொதுமக்களும் கற்பனையாக வெளியாகும் செய்திகளை நம்பவேண்டாம். எந்த பெண்ணுடனும் இதுவரை எனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து சிம்புவின் திருமணம் இப்போதைக்கு இல்லை என்பதே தற்போதைய நிலையாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
![](https://jscss.indiaglitz.com/anomusercomment.jpg)