கட் அவுட்டுக்கு அண்டா பால்: சிம்பு புதுவிளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடித்த 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்பட்ம் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் சிம்பு சமீபத்தில் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் தன்னுடைய ரசிகர்கள் தனக்கு பேனர், கட் அவுட், பாலாபிஷேகம் செய்வதற்கு பதில் தங்களுடைய பெற்றோர்களுக்கு புதுத்துணி வாங்கிக்கொடுத்து அந்த வீடியோவை அனுப்பினால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன் என்று கூறினார்.
அதன்பின் திடீரென இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் ஒரு வீடியோவை சிம்பு வெளியிட்டார். அந்த வீடியோவில் 'தன்னுடைய ரசிகர்கள் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' ரிலீஸ் தினத்தில் தனது கட் அவுட்டுக்கு அண்டா அண்டாவாக பாலாபிஷேகம் செய்யும்படி கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து பால் முகவர்கள் சங்கத்தினர் புகாரும் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சிம்பு, 'அண்டாவில் பால் காய்ச்சி மக்களுக்கு கொடுக்க சொன்னேன் என்றும், கட் அவுட்டுக்கு ஊற்ற சொல்லவில்லை என்றும் கூறியதோடு, பால் அபிஷேகம் பற்றி நான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
படம் வெளியாக இன்னும் நான்கு நாட்கள் இருப்பதால் அதற்குள் சிம்பு வேறொரு கருத்தை கூறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments