கட் அவுட்டுக்கு அண்டா பால்: சிம்பு புதுவிளக்கம்

  • IndiaGlitz, [Monday,January 28 2019]

சிம்பு நடித்த 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்பட்ம் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் சிம்பு சமீபத்தில் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் தன்னுடைய ரசிகர்கள் தனக்கு பேனர், கட் அவுட், பாலாபிஷேகம் செய்வதற்கு பதில் தங்களுடைய பெற்றோர்களுக்கு புதுத்துணி வாங்கிக்கொடுத்து அந்த வீடியோவை அனுப்பினால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன் என்று கூறினார்.

அதன்பின் திடீரென இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் ஒரு வீடியோவை சிம்பு வெளியிட்டார். அந்த வீடியோவில் 'தன்னுடைய ரசிகர்கள் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' ரிலீஸ் தினத்தில் தனது கட் அவுட்டுக்கு அண்டா அண்டாவாக பாலாபிஷேகம் செய்யும்படி கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து பால் முகவர்கள் சங்கத்தினர் புகாரும் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சிம்பு, 'அண்டாவில் பால் காய்ச்சி மக்களுக்கு கொடுக்க சொன்னேன் என்றும், கட் அவுட்டுக்கு ஊற்ற சொல்லவில்லை என்றும் கூறியதோடு, பால் அபிஷேகம் பற்றி நான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

படம் வெளியாக இன்னும் நான்கு நாட்கள் இருப்பதால் அதற்குள் சிம்பு வேறொரு கருத்தை கூறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'தல 59' படக்குழுவினர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

தல அஜித் நடிப்பில் போனிகபூரின் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் 'பிங்க்' ரீமேக் திரைப்படம் உருவாகவிருப்பதாக அதிகாரபூர்வமான செய்தி சமீபத்தில் வெளியானது.

நடுக்கடலில் பேனர் கட்டிய சிம்பு ரசிகர்கள்: வேற லெவலில் VRV புரமோஷன்!

சிம்பு நடித்த 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

பாஜகவில் இணைந்தார் விஜய்-விஜயகாந்த் பட நாயகி

இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் சினிமா நட்சத்திரங்கள் பலர் களத்தில் குதிக்க காத்திருக்கின்றனர்.

ஜிவி பிரகாஷ் படத்திற்கு புரமோஷன் செய்யும் தனுஷ்

தனுஷ் நடித்து வரும் 'அசுரன்' படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வரும் நிலையில், ஜிவி பிரகாஷ் நடித்த படம் ஒன்றுக்கு தனுஷ் இன்று புரமோஷன் செய்யவுள்ளார்.

பத்மஸ்ரீ விருதால் ஸ்கிரிப்ட் மாறுகிறதா? 'நம்பி நாராயணன்' படம் குறித்து மாதவன் விளக்கம்

நடிகர் மாதவன் 'ராக்கெட்டரி' என்ற படத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணன் கேரக்டரில் நடிப்பதோடு, அந்த படத்தை அனந்த் மகாதேவானுடன் இணைந்து இயக்கியும் வருகிறார்