அந்தப் பாடலை நான் எழுதவில்லை. இசையமைக்கவில்லை. சிம்பு
- IndiaGlitz, [Sunday,November 12 2017]
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து சிம்பு பாடிய பாடல் சமீபத்தில் இணையதளங்களில் வைரலானது. ’தட்ரோம் தூக்குறோம்’ என்று தொடங்கும் இந்த பாடலில் உள்ள வரிகள் பண மதிப்பிழப்பால் மக்கள் பட்ட கஷ்டங்கள் வெளிப்பட்டதால் பொதுமக்கள் சார்பில் வரவேற்பும், பாஜக சார்பில் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் சிம்பு வீட்டின் முன் போராட்டம் நடத்தவுள்ளதாக வெளிவந்த செய்தியினை அடுத்து சிம்புவின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்த நிலையில் சிம்பு இந்த பாடல் குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: 'எனக்குச் சரியென்று தோன்றினால் எத்தகைய துணிச்சலான கருத்துகளையும் சொல்லத் தயங்கமாட்டேன். அந்தப் பாடலை நான் எழுதவில்லை. இசையமைக்கவில்லை. என் படத்துக்கான பாடலுமில்லை. இந்தப் பாடலை பாடச் சொல்லிகேட்டார்கள். நன்றாக இருந்தது. மக்கள் பட்ட கஷ்டங்களை எடுத்துக் கூறியிருந்ததால் அதனைப் பாடினேன். அதில் தவறு ஒன்றும் இல்லை. பண மதிப்பு நீக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்ததைத்தான் அதில் சொல்லியிருந்தார்கள். யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கோ, அந்தப் பாடலுக்கோ இல்லை' என்று கூறியிருந்தார்