இந்தி தான் தேசிய மொழி என்று கூறிய நடிகரை வெளுத்து வாங்கிய தனுஷ், சிம்பு பட நாயகி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகர் கிச்சா சுதீப்பை பாராட்டும் வகையில் நேற்று பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் ஒரு டுவிட்டை ஹிந்தியில் பதிவு செய்ததற்கு, ‘தனக்கு இந்தி புரியவில்லை என்றும் அனைவருக்கும் புரியும் மொழியில் கருத்து சொல்லுங்கள் என்றும் கிச்சா சுதீப் கூறினார். இதனையடுத்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. அந்த வாக்குவாதத்தில் ஒரு கட்டத்தில் ’இந்தி தேசிய மொழி என்று உங்களுக்கு தெரியாதா? என்று கூறிய அஜய் தேவன், ஹிந்தி தேசிய மொழி இல்லை என்றால் உங்கள் மொழி படங்களை ஏன் இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள் என கேள்வி எழுப்பி இருந்தார்.
அஜய்தேவ்கானின் இந்த பதிவு தென்னிந்திய திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ராம்கோபால் வர்மா இதுகுறித்து கூறியபோது, ‘கன்னட திரைப்படமான ‘கேஜிஎப் 2’ இந்தி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது தான் உங்கள் பொறாமைக்கு காரணம்’ என கூறியிருந்தார்.
இந்த நிலையில் சிம்பு நடித்த ’குத்து’ தனுஷ் நடித்த ’பொல்லாதவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ரம்யா இதுகுறித்து கூறிய போது, ‘இந்தி தேசிய மொழி கிடையாது. இந்தி தேசிய மொழி என்று கூறுவது அஜய்தேவ்கானின் அறியாமை என்றும் ’புஷ்பா’, ‘ஆர்.ஆர்.ஆர்’, ‘கேஜிஎப் 2’ போன்ற படங்களின் வெற்றிதான் அவருடைய பிரச்சனைக்கு காரணம் என்றும் பதிவு செய்துள்ளார்.
மேலும் ’உங்கள் படங்களை நாங்கள் ரசித்து பார்ப்பது போல், எங்கள் படங்களையும் நீங்கள் ரசித்துப் பாருங்கள்’ என்றும் ரம்யா கூறியுள்ளார். நடிகையும் அரசியல்வாதியுமான ரம்யாவின் பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
.@KicchaSudeep मेरे भाई,
— Ajay Devgn (@ajaydevgn) April 27, 2022
आपके अनुसार अगर हिंदी हमारी राष्ट्रीय भाषा नहीं है तो आप अपनी मातृभाषा की फ़िल्मों को हिंदी में डब करके क्यूँ रिलीज़ करते हैं?
हिंदी हमारी मातृभाषा और राष्ट्रीय भाषा थी, है और हमेशा रहेगी।
जन गण मन ।
Hi @KicchaSudeep, You are a friend. thanks for clearing up the misunderstanding. I’ve always thought of the film industry as one. We respect all languages and we expect everyone to respect our language as well. Perhaps, something was lost in translation ??
— Ajay Devgn (@ajaydevgn) April 27, 2022
No- Hindi is not our national language. @ajaydevgn Your ignorance is baffling. And it’s great that films like KGF Pushpa and RRR have done so well in the Hindi belt- art has no language barrier.
— Divya Spandana/Ramya (@divyaspandana) April 27, 2022
Please enjoy our films as much as we enjoy yours- #stopHindiImposition https://t.co/60F6AyFeW3
PM leads by example
— Divya Spandana/Ramya (@divyaspandana) April 28, 2022
cc: @ajaydevgn https://t.co/JXLqtzj9wW
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments