18 ஆண்டுக்கு பின் கிடைத்த விடை.. இதற்கும் விடை தாருங்கள் 007..  இயக்குனர்   சிம்புதேவன் பதிவு வைரல்..!

  • IndiaGlitz, [Thursday,September 26 2024]

18 ஆண்டுகளுக்கு முன் ரிலீசான தனது படத்தின் புதிருக்கு விடையை கண்டுபிடித்து கொடுத்த இணையதள பயனாளி ஒருவரிடம் இயக்குனர் சிம்பு தேவன் 'அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்ட இந்த புதிருக்கும் விடை கண்டுபிடித்துக் கொடுங்கள் 007’ என்று பதிவு செய்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு வடிவேலு நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவான ’இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ என்ற திரைப்படத்தில் ஒரு காட்சி குறித்து இணையதளவாசி ஒருவர் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறி இருப்பதாவது:

23ம் புலிகேசி படத்தில் மன்னனாக வரும் நடிகர் *வடிவேலு* தன்னிடம் பணி செய்யும் படை வீரனிடம் இரண்டு கேள்வி கேட்பார். முதல் கேள்வி...

*தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்...*
அவன் யார்?

இந்த விடுகதையானது சாதாரணமாக வரும் உளறலோ பிதற்றலோ நகைச்சுவையோ அல்ல.

இது ஒரு
தெய்வீக விடுகதை...

இதற்கு புராணத்தை வைத்தே விளக்கி விடலாம்.

தானம் கேட்கும் வறியவர்களுக்கு தட்டாமல் வழங்குபவர் தான் தட்டான்.
( தட்டான் - *மஹாபலிச் சக்கரவர்த்தி* )

தட்டானுக்கு
சட்டை போடுவது என்றால்,
தானம் கொடுக்க நினைப்பவரின் எண்ணத்தை தடுப்பது அதாவது அவரின் ஈகை உள்ளத்தை மறைப்பது என்று பொருள்.

நம் மஹாபலிச் சக்கரவர்த்தி 99 அசுவமேத யாகம் செய்து விட்டு நூறாவது அசுவமேத யாகம் செய்யும் போது பெருமாள் வாமன அவதாரத்தில் வந்து அவரிடம் தானம் கேட்கிறார்...

( குட்டை
பையன் - வாமன அவதாரத்தை குறிக்கிறது. )

ஆனால் சுக்ராச்சாரியார் மஹாபலி தானத்தை தாரை வார்ப்பதைத் தடுக்க வண்டாக உருமாறி கமண்டலத்தின் வாயை நீர் வராதவாறு அடைத்துக்
கொள்கிறார்...

அப்பொழுது
நம் குட்டைப் பையன் வாமனர் என்ன செய்கிறார் ?

ஒரு குச்சியை (கட்டை) எடுத்து கமண்டலத்தின் குழாயை குத்தி சுக்ராச்சாரியருக்கு ஒரு கண் ஊனமாகி விடுமாறு செய்கிறார்.

பின் சுக்ராச்சாரியார் தன் தவறை உணர்ந்தார்.

அவரை மன்னித்து, கொடுப்பதில் வள்ளலான
மஹா பலிச் சக்கரவர்த்தியின் புகழை உலகறிய செய்தவர் பெருமாள்.

இது தான் தட்டானுக்குச் சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்…” என்பதற்கான விளக்கம்…!!

அடுத்து ... சரி அதை விடு. அடுத்த கேள்வி. இந்தக் கேள்விக்கு பதில் சொல்லாவிட்டால் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். சரியா? என்று கேட்பார். பணியாளன் கேளுங்கள் மன்னா என்று பயம் கலந்த பதற்றத்தில் அவரை நோக்குவான்.

அடுத்த கேள்வி இதுதான்

*பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை* இதற்கு என்ன பதில் என்பார். இரண்டாவது கேள்விக்கும் பதில் தெரியாத பயத்தில் மன்னா என்று மன்னரின் காலை பிடித்து கதறுவான். படம் பார்த்த நமக்கு அது ஒரு நகைச்சுவை காட்சியாக மட்டும் தான் தெரியும். அதன் பொருள் நமக்கு தெரியாது. இதோ அதற்கான விடை

*குலசேகரன் என்றால் குபேரன் என்று பொருள்*

*ஸ்ரீ* என்றால் செல்வம், அந்த செல்வத்தின் அதிபதி லட்சுமியை மணக்க பெருமாளுக்கு பைனான்ஸ் செய்தவர் நம் *குபேரன்.*

ஆக
பெருமாளின் குலம் பெருக ரட்சித்த குபேரன் தான் பெருமாளின் குலசேகரன்.

குபேரனுக்கு EMI கட்ட பெருமாளுக்கு பொருளீட்ட ஒரு ஸ்தலம் தேவைப் பட்டது.

அப்பொழுது பெருமாளுக்கு ஏழுமலையை அளித்தவர்
ஸ்ரீ வராகப் பெருமாள்...

அதனால்
(வராகம் - பன்றி முகம்
உடையவர் )
ஸ்ரீ வராகப்
பெருமாளுக்கு நன்றி சொல்லி, குன்றின் (திருப்பதி )மீது நின்ற கோலத்தில் மக்களுக்கு அருள் புரிந்து அவருடையை குலசேகரனுக்கு (குபேரன்) சேர வேண்டிய பணத்தை கொடுத்து,
கடனை வென்றாராம் பெருமாள்.

இது தான் பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை… என்ற விளக்கம்..

இந்த பதிவுக்கு பதிலளித்த இயக்குனர் சிம்புதேவன், ‘புலிகேசி விடுகதைக்கு இப்படி ஒரு பதிலை தேடி கண்டுபிடித்த அந்த 007ஐ நேரில் காண விரும்புகிறேன்! முடிந்தால் எடிட்டிங்ல் தூக்கப்பட்ட இந்த விடுகதைக்கும் அவரிடமே அர்த்தம் கேட்க விரும்புகிறேன்..

“நரிக்கு குறி சொல்லி கறி சாப்பிட்டால்.. வெறிகொண்ட வேங்கைக்கும் வரும் சொறி! அது என்ன?

More News

சின்னத்திரையில் ஒரு புதிய முயற்சி.. திரைப்படமாகும் தொலைக்காட்சி தொடர்..!

திரைப்படங்கள் போலவே, சின்னத்திரை தொடர்கள் நாளுக்கு நாள் பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது. மதியம் முதல் இரவு வரை தொடர்ச்சியாக தொலைக்காட்சி

புரட்டாசி மாத ராசி பலன்கள் ஜோதிடர் குருஜி டாக்டர் வெணுஸ் பாலாஜி

பிரபல ஜோதிடர் குருஜி டாக்டர் வெணுஸ் பாலாஜி அவர்கள், லட்சுமி நரசிம்மர் வழிபாட்டின் சிறப்பு மற்றும் புரட்டாசி மாதத்தில் அவரை வழிபடுவதன் முக்கியத்துவம் பற்றி விரிவாகப் பேசியுள்ளார்.

புரட்டாசி மாத சிறப்பு மற்றும் பலன்கள்

பிரபல ஜோதிடர் குருஜி டாக்டர் வெணுஸ் பாலாஜி அவர்கள், லட்சுமி நரசிம்மர் வழிபாட்டின் சிறப்பு மற்றும் புரட்டாசி மாதத்தில் அவரை வழிபடுவதன் முக்கியத்துவம் பற்றி விரிவாகப் பேசியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் வனிதா விஜயகுமார் குடும்பத்தில் இருந்து இன்னொருவரா?

பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் ஆறாம் தேதி முதல் விஜய் டிவியில் தொடங்க இருக்கின்ற நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்து அவ்வப்போது கசிந்த தகவல்களை ஏற்கனவே பார்த்தோம்.

'கொட்டுக்காளி' உள்பட இந்த வாரம் ஓடிடியில் எத்தனை தமிழ்ப்படங்கள்? முழு விவரங்கள்..!

ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் சூரி நடித்த 'கொட்டுக்காளி'  உள்பட நான்கு படங்கள் வெளியாகியுள்ளது