சமூக வலைத்தளத்தில் இருந்து சிம்பு திடீர் விலகல். காரணம் என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிம்பு தனது ரசிகர்களுக்கு பெரும் இடைவெளியில் படங்கள் கொடுத்து கொண்டிருந்தாலும், சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வபோது தனது ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பவர். அவர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யும் ஒருசில கருத்துக்கள் சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், அவரது ரசிகர்கள் தொடர்ந்து அவருக்கு ஆதரவு அளித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று திடீரென சிம்பு சமூக வலைத்தளத்தில் இருந்து தற்போதைக்கு விலகுவதாக அறிவித்துள்ளார். இனிமேல் தன்னுடைய டுவிட்டர் பக்கம் தனது ரசிகர் மன்றத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் தேவைப்பட்டால் மீண்டும் சமூக வலைத்தளத்திற்கு திரும்புவதாகவும் கூறியுள்ளார்.
ஒரு நல்ல நடிகருக்கு அழகு, ரசிகர்களை திருப்தி செய்யும்படியான திரைப்படங்களை கொடுப்பதுதான். அந்தவகையில் தன்னுடைய ரசிகர்களை திருப்திபடுத்தும் நல்ல படங்களை கொடுப்பதில் தன்னுடைய முழு கவனமும் இனி இருக்கும் என்றும் தன்னுடைய நிலைமையை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com