முதல்முறையாக பாலிவுட்டில் அறிமுகமாகும் சிம்பு: வைரலாகும் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகில் தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் நடிகர்களில் ஒருவர் சிம்பு என்பதும் அவர் நடித்த ’மாநாடு’ மற்றும் ’வெந்து தணிந்தது காடு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் சூப்பர் ஹிட்டாகின என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ’பத்து தல’ படம் விரைவில் ரிலீசாக உள்ளது. அதுமட்டுமின்றி அவர் விரைவில் சுதா கொங்காரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும், கொரோனா குமார்’ என்ற படத்திலும் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் விரைவில் ‘வெந்து தணிந்தது காடு 2’ படமும் உருவாகவுள்ளது.
இந்த நிலையில் சிம்பு நடிகர் மட்டுமின்றி சிறந்த பாடகர் என்பதும் தனது படத்தில் மட்டுமின்றி மற்ற நடிகர்களின் படங்களிலும் பாடி வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் சிம்பு தனது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான மகத் நடிக்கும் பாலிவுட் படமான ’டபுள் எக்ஸெல்’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ள சிம்பு ’எனது நண்பர் மகத் அவர்களுக்காக பாலிவுட் திரையுலகில் நான் அறிமுகமாகி ஒரு பாடலை பாடி உள்ளேன். அந்த பாடல் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த பாடலின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
Here’s my first song in Hindi,
— Silambarasan TR (@SilambarasanTR_) October 14, 2022
My debut as a singer in Bollywood & this one is for my friend @MahatOfficial Onwards & upwards ! Proud of you ❤️
Good luck to the whole team of doubleXL Guys get ready to groove with the #TaaliTaali song! https://t.co/4WrANraUxU
My gratitude. Looking forward for the success of the movie. @humasqureshi
— Silambarasan TR (@SilambarasanTR_) October 14, 2022
Happy to be part of #DoubleXL ????❤️ https://t.co/hDi03H9brv
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com