இலங்கை தமிழ் பெண்ணுடன் திருமணமா? சிம்பு தரப்பினர் விளக்கம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிம்புவுக்கு இலங்கை தமிழ் பெண்ணை நிச்சயம் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் பல ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில் இது குறித்து சிம்பு தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிம்புவுக்கு அவரது பெற்றோர்களான டி ராஜேந்தர் - உஷா தம்பதிகள் கடந்த சில ஆண்டுகளாக திருமணத்திற்கு பெண் பார்த்து வருகிறார்கள். சிம்புவின் திருமணம் குறித்து பல வதந்திகள் அவ்வப்போது வெளிவரும் நிலையில் சிம்பு தரப்பிலிருந்து மறுப்பு விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் கடந்த சில தினங்களாக இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளை சிம்பு திருமணம் செய்ய இருப்பதாக பல ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சிம்பு தரப்பிலிருந்து தற்போது இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிம்புவின் மேனேஜர் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ’இலங்கை தமிழ் பெண் ஒருவரை நடிகர் சிம்பு திருமணம் செய்ய உள்ளதாக சில செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்தியை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம். இதில் எந்தவிதமான உண்மையையும் இல்லை. திருமணம் போன்ற தனிப்பட்ட விஷயங்கள் குறித்து செய்தி வெளியிடும்போது தகவலை உறுதி செய்து அதன் பின் வெளியிட வேண்டிக் கொள்கிறோம். சிம்புவின் திருமணம் குறித்த தகவல் உறுதியானால் முதலில் நாங்கள் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொள்வோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து சிம்புவுக்கு இன்னும் திருமணம் உறுதி செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments