இலங்கை தமிழ் பெண்ணுடன் திருமணமா? சிம்பு தரப்பினர் விளக்கம்..!

  • IndiaGlitz, [Saturday,February 25 2023]

நடிகர் சிம்புவுக்கு இலங்கை தமிழ் பெண்ணை நிச்சயம் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் பல ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில் இது குறித்து சிம்பு தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிம்புவுக்கு அவரது பெற்றோர்களான டி ராஜேந்தர் - உஷா தம்பதிகள் கடந்த சில ஆண்டுகளாக திருமணத்திற்கு பெண் பார்த்து வருகிறார்கள். சிம்புவின் திருமணம் குறித்து பல வதந்திகள் அவ்வப்போது வெளிவரும் நிலையில் சிம்பு தரப்பிலிருந்து மறுப்பு விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் கடந்த சில தினங்களாக இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளை சிம்பு திருமணம் செய்ய இருப்பதாக பல ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சிம்பு தரப்பிலிருந்து தற்போது இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிம்புவின் மேனேஜர் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ’இலங்கை தமிழ் பெண் ஒருவரை நடிகர் சிம்பு திருமணம் செய்ய உள்ளதாக சில செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்தியை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம். இதில் எந்தவிதமான உண்மையையும் இல்லை. திருமணம் போன்ற தனிப்பட்ட விஷயங்கள் குறித்து செய்தி வெளியிடும்போது தகவலை உறுதி செய்து அதன் பின் வெளியிட வேண்டிக் கொள்கிறோம். சிம்புவின் திருமணம் குறித்த தகவல் உறுதியானால் முதலில் நாங்கள் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொள்வோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சிம்புவுக்கு இன்னும் திருமணம் உறுதி செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

More News

கெளதம் மேனனின் தந்தையும் ஒரு நடிகரா? அதிலும் கமல் படத்தில் நடித்துள்ளாரா? ஆச்சரிய தகவல்..!

 பிரபல இயக்குனர் கௌதம் மேனன் தற்போது படங்களை இயக்குவதை விட படங்களில் நடிப்பதில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். விஜய் நடித்து வரும் 'லியோ', வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும்

'டேய் உனக்கு கல்யாணம் ஆயிருச்சுல்ல.. கோமாளியை மிரட்டிய ஹன்சிகா.. வீடியோ வைரல்..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கோமாளிகளில் ஒருவரான புகழை நீ அதிகமாக பெண்களுடன் விளையாடுகிறாய் என ஹன்சிகா மிரட்டிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

'கேப்டன் மில்லர்' படத்தில் 'உறியடி' விஜயகுமார் நடிப்பது உண்மையா?

தனுஷ் நடித்து வரும் 'கேப்டன் மில்லர்' என்ற திரைப்படத்தில் 'உறியடி' விஜயகுமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது படக்குழுவினர் இது குறித்து விளக்கம்

ஆக்சன் கிங் அர்ஜுன் கதையில் துருவா சர்ஜாவின் மாஸ் நடிப்பில் மார்டின் டீசர் !!!

வாசவி எண்டர்பிரைசஸ் சார்பில் தயாரிப்பாளர் உதய் K மேத்தா தயாரிப்பில், ஆக்சன் கிங் அர்ஜுன் கதையில், இயக்குநர் AP அர்ஜுன் இயக்கத்தில், 'ஆக்சன் பிரின்ஸ்' துருவா சர்ஜா நடிப்பில், பிரமாண்டமான

பி வாசு குடும்பத்தில் நிகழ்ந்த சோக சம்பவம்.. 'சந்திரமுகி 2' படப்பிடிப்பு ஒத்திவைக்கப்படுகிறதா?

பிரபல இயக்குனர் பி வாசு இல்லத்தில் நடந்த சோக நிகழ்வு காரணமாக இன்னும் சில நாட்களுக்கு 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு நடக்காது என்று கூறப்படுகிறது.