இணையதளங்களை பரபரப்பாக்கியுள்ள சிம்புவின் புதிய தோற்றம்

  • IndiaGlitz, [Sunday,September 24 2017]

சிம்பு நடித்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் அதில் ஒன்று அவருடைய உடல் எடை என்றும் கூறப்படுவதுண்டு. மேலும் சிம்புவால் உடல் எடையை இனி குறைப்பது கடினம் என்று பலர் விமர்சனம் செய்த நிலையில் விமர்சனத்திற்கு பதிலடி தரும் வகையில் சிம்புவின் லேட்டஸ்ட் தோற்றத்துடன் கூடிய ஸ்டில் ஒன்று இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

ஸ்லிம் தோற்றத்தில் வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் தாடி, மீசையுடன் கூடிய சிம்புவின் புதிய தோற்றம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த தோற்றம் சிம்பு நடிக்கவிருக்கும் ஆங்கில படத்திற்கா? அல்லது மணிரத்னம் நடிக்கவுள்ள புதிய படத்திற்கா? என்று உறுதியாகவில்லை எனினும் இந்த தோற்றம் நிச்சயம் சிம்பு ரசிகர்களை கவரும் என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை.

More News

தனுஷ் படத்தின் வில்லனாகும் தனுஷ் பட நாயகன்

தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'காலா', தனுஷ் நடிக்கும் 'வடசென்னை மற்றும் மலையாள திரைப்படமான 'தரங்கம்' ஆகிய படங்களை தயாரித்து வருகிறது.

பொங்கல் ரேஸில் இணைந்த விஷால் படம்

வரும் 2018ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய 'தானா சேர்ந்த கூட்டம்' ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே இரவில் முடியும் விஜய்சேதுபதியின் 'எடக்கு'

கோலிவுட் திரையுலகில் அதிக படங்கள் நடித்து கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி. ஏற்கனவே சமீபத்தில் 'கவண்', 'விக்ரம் வேதா', மற்றும் புரியாத புதிர் ஆகிய விஜய்சேதுபதி படங்கள் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் சந்திக்கும் 3வது முதல்வர் யார் தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசனின் அரசியல் ஆட்டம் ஆரம்பமான நாளில் இருந்தே தமிழக அரசியலில் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் பரபரப்பு பற்றி கொண்டது.

திரையில் விழும் அரசியல் வெளிச்சம் தரையிலும் விழட்டும்: கபிலன் வைரமுத்து

கபிலன் வைரமுத்துவின் 'இளைஞர்கள் என்னும் நாம்' என்னும் ஆவணப்படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வரும் 25ஆம் தேதி வெளியிடுகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்