'தக்லைஃப்' படத்திற்காக கெட்டப்பை மாறுகிறாரா சிம்பு? அப்ப 'எஸ்டிஆர் 48' என்ன ஆச்சு?
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடிப்பில், உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்டிஆர் 48’ என்ற படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்திற்காக கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.
மேலும் இந்த படத்திற்கு தயாராகுவதற்காக வெளிநாடு சென்று புதிய லுக்கில் வந்த சிம்பு நீண்ட தாடியுடன் உள்ள கெட்டப்பில் சில மாதங்களாக உள்ளார் என்பதும் இந்த கெட்டப்பில் தான் அவர் ‘எஸ்டிஆர் 48’ படத்தில் தோன்ற இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ’தக்லைஃப்’ படத்தில் திடீரென நடிகர் துல்கர் சல்மான் விலகி விட்டதை அடுத்து அந்த கேரக்டரில் சிம்பு நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது மும்பையில் சிம்புவுக்கு லுக் டெஸ்ட் எடுக்கப்பட்டதாகவும் அதில் மணிரத்னம் திருப்தி அடைந்த நிலையில் சிம்பு ’தக்லைஃப்’ படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் ‘எஸ்டிஆர் 48’ படத்திற்காக கடந்த ஒரு வருடமாக தாடியுடன் இருக்கும் லுக்கை சிம்பு மாற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி என்றால் ‘எஸ்டிஆர் 48’ படம் என்ன ஆச்சு என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் ’தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் மீண்டும் ‘எஸ்டிஆர் 48’ படத்தின் லுக்கில் மீண்டும் சிம்பு மாறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com