ரஜினி-அஜித் படத்தொடர்ச்சியில் சிம்பு?

  • IndiaGlitz, [Monday,June 06 2016]

'தல அஜித்துக்கு கோலிவுட்டில் உள்ள ஏகப்பட்ட நட்சத்திரங்கள் ரசிகர்களாக இருப்பது நாம் அறிந்ததே. ஆனால் சிம்பு போன்ற நடிகர்கள் அஜித்தின் தீவிர ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் அஜித்துடன் நடிக்க சிம்புவுக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற போதிலும் அஜித் படத்தின் அடுத்த பாகத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஆம், அஜித் நடித்த சூப்பர் ஹிட் படமான 'பில்லா', மற்றும் 'பில்லா 2' படத்தை அடுத்து உருவாகவிருக்கும் 'பில்லா 3' படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு 'பில்லா 2018' என்று டைட்டில் வைக்கப்படும் என்றும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் வெங்கட்பிரபு 'பில்லா 3' படத்தில் நடிக்க சம்மதமா? என தனது சமூகவலைத்தளத்தின் மூலம் சிம்புவிடம் கேட்க அதற்கு சிம்பு 'பொறந்ததில் இருந்தே தயாராக இருக்கின்றேன்' என்று பதில் கூறியுள்ளார். விரைவில் இதுகுறித்து இருவரும் சந்தித்து பேசவுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.