சிம்புவின் பீப் பாடலை வெளியிட்டதும் அட்மின் தான்: டி.ராஜேந்தர்

  • IndiaGlitz, [Saturday,March 10 2018]

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிம்பு கம்போஸ் செய்த பீப் பாடல் இணையத்தில் லீக் ஆகி மிகப்பெரிய சர்ச்சையை ஏறபடுத்தியது. மாதர் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் சிம்பு மீது காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்தனர்.

இந்த நிலையில் சமீபத்தீல் தனது கட்சியை புதிய பெயரிட்டு மெருகேற்றியுள்ள டி.ராஜேந்தர் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, அவரிடம் சிம்புவின் பீப் பாடல் லீக் ஆனது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய டி.ஆர், 'சிம்பு மீது வேண்டுமென்றே பழிபோடும் நோக்கத்தில் ஒருசிலரால் அந்த பாடல் லீக் செய்யப்பட்டது. அதுவொரு அதிகாரபூர்வ பாடல் அல்ல. டம்மி வார்த்தைகள் போட்டு பாடப்பட்ட அந்த பாடலை பணத்திற்காக ஒருசிலர் இணையத்தில் லீக் ஆக்கியுள்ளனர்' என்று கூறினார்.

அப்போது ஒரு நிருபர் அந்த பாடலை லீக் ஆக்கியது சிம்புவின் அட்மினா? என்று கேட்க, 'எச்.ராஜாவுக்கே ஒரு அட்மின் இருக்கும்போது சிம்புவுக்கு அட்மின் இருக்கக்கூடாதா? பணத்திற்காக அவர் லீக் செய்திருக்க கூடாதா? என்று கூறினார்.