நண்பனின் திருமணத்திற்கு சென்று வாழ்த்து கூறிய சிம்பு!

  • IndiaGlitz, [Saturday,February 01 2020]

அஜித்தின் மங்காத்தா, விஜய்யின் ஜில்லா உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்தவரும் பிக்பாஸ் 2 போட்டியாளர்களில் ஒருவருமான மகத், தனது நீண்ட நாள் காதலியும் நடிகையுமான பிராய்ச்சி தேசாயை இன்று திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்திற்கு இருவீட்டாரும் உறவினர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பிரமுகர்கள் பலர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். கடந்த ஆண்டு மகத்-பிராய்ச்சி நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இன்று இருவருக்கும் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த திருமணத்திற்கு மகத்தின் நெருங்கிய நண்பரான சிலம்பரசன் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர்களாக ஹரிஷ் கல்யாண், பிந்துமாதவி உள்பட பலர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர். தனது திருமண புகைப்படங்களை தனது சமூக வலை பக்கத்தில் மகத் பதிவு செய்துள்ளார்.