நாளை மறுநாள் திருமண தேதியை அறிவிக்கின்றாரா சிம்பு?

  • IndiaGlitz, [Tuesday,February 01 2022]

நடிகர் சிம்பு நாளை மறுநாள் தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் நிலையில் அன்றைய தினம் அவர் தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று செய்திகள் கசிந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிம்பு நடித்துவரும் ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தின் அப்டேட் மற்றும் அவர் நடிக்க உள்ள ’பத்து தல’ என்ற திரைப்படத்தின் அப்டேட் ஆகியவை சிம்புவின் பிறந்த நாளான பிப்ரவரி 3 அன்று வெளிவரும் என்று கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ’ஈஸ்வரன்’ திரைப்படத்தில் இணைந்து நடித்த நடிகை நிதிஅகர்வாலை சிம்பு காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்யப் போகிறார்கள் என்றும் வதந்திகள் இணையதளங்களில் உலாவி வருகிறது. இந்த நிலையில் நாளை மறுநாள் சிம்பு தனது பிறந்தநாளின் போது நிதி அகர்வாலை திருமணம் செய்வது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது நாளை மறுநாள் தான் தெரியவரும்.

சிம்புவை காதலிப்பது குறித்து வெளியான செய்திக்கு கருத்து கூறிய நிதி அகர்வால் ’சில வதந்திகள் உண்மையாக இருக்கலாம், சில பொய்யாகவும் இருக்கலாம். உண்மை என்ன என்பது நமது பெற்றோருக்கு மட்டும் தெரிந்தால் போதும், வதந்திகளை பற்றி கவலைப்பட தேவையில்லை’ என்று பதில் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வாலின் புதிய லுக்!

பிரபல நடிகை காஜல் அகர்வால் கடந்த ஆண்டு மும்பை தொழிலதிபர் கவுதம் என்பவரை திருமணம் செய்த நிலையில் அவர் சமீபத்தில் கர்ப்பம் ஆனதாக செய்திகள் வெளியானது.

எனக்கு இல்லைன்னா எல்லாரும் சாவட்டும்: வனிதா ஆவேசம்

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இருபத்தி நான்கு மணி நேரமும் ஹாட்ஸ்டார் ஓடிடியில்  ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சி முதல் நாளில் இருந்தே சுறுசுறுப்பாகி உள்ளது .

சொந்த பிராண்ட்டை மிஞ்சிய சிஎஸ்கே… இந்தியாவில் முதல் வரலாற்று சாதனை!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பங்குச் சந்தை மூலதனம் அதன்

யூடியூப் சேனல் ஆரம்பித்த பிரபல நடிகை… ரசிகர்கள் உற்சாகம்!

தமிழ், தெலுங்கு சினிமாவில் அறியப்படும் நடிகையாக இருந்துவருபவர்

முன்னாள் காதலிக்கு வாழ்த்துக்கூறிய சல்லுபாய்… ரியாலிட்டி ஷோவில் நெகிழ்ச்சி!

பாலிவுட் நட்சத்திர நடிகையான கத்ரினா கைஃப் மற்றும் நடிகர்