சிம்புவின் 'ஈஸ்வரன்' ரிலீஸ் தேதி: அட்டகாசமான போஸ்டருடன் அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான கிராமத்து கதையம்சம் கொண்ட திரைப்படம் ‘ஈஸ்வரன்’, இந்தப்படம் தேனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மிக குறைந்த காலத்தில் படமாக்கப்பட்டது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிந்து சமீபத்தில் சென்சாருக்கு சென்றது என்பதும் சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து ’யூ’ சான்றிதழ் கொடுத்தார்கள் என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது படக்குழுவினர் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சிம்புவின் டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவு செய்யப்பட்டுள்ள அட்டகாசமான போஸ்டரில் இந்த படத்திற்கு ’யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது என்றும் ஜல்லிக்கட்டு காளை ஜனவரி 14-ஆம் தேதி வர்ரான்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஜனவரி 14-ஆம் தேதி ‘ஈஸ்வரன்’ திரைப்படம் வெளியாகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
ஏற்கனவே விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஜனவரி 14-ஆம் தேதி ‘ஈஸ்வரன்’ திரைப்படம் வெளியாகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து வரும் பொங்கல் தினத்தில் விஜய் மற்றும் சிம்பு படங்கள் மோத உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதால் இரு தரப்பு ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
With blessings of almighty #Eeswaran coming to screens worldwide this January 14th. #SilambarasanTR #Suseinthiran @MusicThaman @DCompanyOffl @madhavmedia @offBharathiraja @AgerwalNidhhi @Nanditasweta @Bala_actor @YugabhaarathiYb @DOP_Tirru @DuraiKv @DSharfudden pic.twitter.com/iLCjb1E8JK
— Silambarasan TR (@SilambarasanTR_) December 30, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments