தமிழர்கள் கிட்ட மோதாதே: சிம்பு எச்சரிக்கை
- IndiaGlitz, [Friday,May 25 2018]
தூத்துகுடியில் நடைபெற்று வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கிட்டத்தட்ட கோலிவுட் திரையுலகினர் அனைவருமே கண்டனம் தெரிவித்துள்ளனர். கமல்ஹாசன் உள்பட ஒருசிலர் நேரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் காவிரி பிரச்சனை உள்பட பல சமூக பிரச்சனைகளுக்கு தமிழன் என்ற முறையில் குரல் கொடுத்த நடிகர் சிம்பு, 13 தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட தூத்துகுடி சம்பவத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு ஆவேசமாக தனது கருத்தை வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவில் ஆங்கிலத்தில் சிம்பு பேசியுள்ளதாவது: தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவியான பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்கள். . என்ன நடக்கிறது இந்த மாநிலத்தில். தலைவர்களும், பிரபங்களும் இரங்கல் மட்டுமே தெரிவித்து வருகிறார்கள். இரங்கல் தெரிவிப்பதால் எந்தவித பயனும் இல்லை. இந்த இரங்கலால் இறந்தவர்கள் திரும்பி வந்துவிடுவார்களா? இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதால் மனசு வலிக்கிறது. மொழி தான் பிரச்சனையா.. அப்படியென்றால் நான் ஆங்கிலத்தில் பேசுகிறேன். பிரச்சனைக்கு தீர்வு என்னிடம் உள்ளது. தமிழர்கள் கிட்ட மோதாதே' என்று சிம்பு கூறியுள்ளார். சிம்புவின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.