விஜய்சேதுபதிக்கு உணவு ஊட்டிவிடும் சிம்பு: வைரலாகும் புகைப்படம்

  • IndiaGlitz, [Wednesday,May 02 2018]

ஒரு பிரபல நடிகரின் கால்ஷீட்டை வாங்கி ஒரு திரைப்படம் இயக்குவதே சிரமமான இன்றைய கால்கட்டத்தில் அரவிந்தசாமி, விஜய்சேதுபதி, சிம்பு மற்றும் அருண்விஜய் என நான்கு நடிகர்களை  இயக்குனர் மணிரத்னம் தனது 'செக்க சிவந்த வானம்' படத்தில் நடித்து வைத்து கொண்டிருக்கின்றார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அரவிந்தசாமி, விஜய்சேதுபதி, சிம்பு மற்றும் அருண்விஜய் ஆகிய நான்கு நடிகர்களும் இணைந்து நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு நடநது வருகிறது. 

இந்த நிலையில் படப்பிடிப்பின் இடையே விஜய்சேதுபதிக்கு சிம்பு உணவு ஊட்டிவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. சிம்புவின் அன்பை வெளிப்படுத்தும் இந்த புகைப்படத்தை சிம்பு, விஜய்சேதுபதி ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

அரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் மற்றும் மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
 

More News

சிக்ஸ்பேக் புகைப்படத்தை வெளியிட்ட விஜய்சேதுபதி நாயகி

சிக்ஸ்பேக் வைத்திருக்கும் நடிகர்களையே விரல்விட்டு எண்ணிவிடலாம். சரத்குமார், விக்ரம், சூர்யா, விஷால், ஆர்யா, ஆதி, அதர்வா போன்ற நடிகர்கள் சிக்ஸ்பேக் உடலமைப்புடன் திரையில் தோன்றியுள்ளனர்

அஜித்தின் சிறப்பு வாய்ந்த ஸ்பெஷல் திரைப்படங்கள்

தல அஜித் என்ற இந்த ஒற்றை வார்த்தை தான் அஜித் ரசிகர்களுக்கு தாரக மந்திரம்....

நெட்ஃபிளிக்ஸில் நேரடியாக வெளியாகும் இந்தியாவின் முதல் திரைப்படம்

தேசிய விருது பெற்ற இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் நடித்த 'சில சமயங்களில்' திரைப்படம் இன்று முதல் நெட்பிளிக்ஸில் நேரடியாக ரிலீஸ் ஆகிறது

விஷாலின் 'இரும்புத்திரை' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஷால் நடித்த இரும்புத்திரை' திரைப்படம் கடந்த மார்ச் மாதமே ரிலீசுக்கு தயாராகிவிட்ட போதிலும், கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.

அஜித் மீது பெரிய மரியாதை ஏற்பட இதுதான் காரணம்: இயக்குனர் சுசீந்திரன்

அஜித் பிறருக்கு செய்த உதவிகள் அளவற்றதாக இருந்தாலும் அவை பெரும்பாலும் வெளியில் தெரிவது இல்லை. உதவி பெற்றவரே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கூறும்போதுதான்