சிம்பு-வெங்கட்பிரபு மீண்டும் இணையும் படம் குறித்த தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகவுள்ள ‘மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க உள்ளது. கோவையில் தொடர்ச்சியாக இந்த படத்தின் படப்பிடிப்பில் ஒரு மாதம் நடைபெற உள்ளதாகவும் இதனை அடுத்து இலங்கையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்றும் மாநாடு படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சிம்பு, வெங்கட் பிரபு இணையும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் பரதன் தனது பரதன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கவுள்ளதாகவும், இந்தப் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் மகத் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
மக்வென் என்பவர் இயக்கி உள்ள இந்த படத்தில் யாஷிகா ஆனந்த், மனோபாலா, மாகபா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். தமன் இசையில் அமுதவன் பாடல் வரிகளில் மோகன் படத்தொகுப்பில் உருவாகவுள்ள இந்த படம் குறித்து மற்ற விபரங்களை நாளை அதாவது பிப்ரவரி 2ம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே சிம்பு-வெங்கட் பிரபு இணையும் ‘மாநாடு’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இன்னொரு படமும் அதே கூட்டணியில் உருவாக இருப்பது சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Interesting details Revealing on 02:02:2020 @BharathanPic @vp_offl @RVBharathan @MahatOfficial
— Bharathan Pictures (@BharathanPic) January 31, 2020
An @mahiram20 @iamvenkat6 dir #MAgVen @MusicThaman @MahatOfficial@iamyashikaanand @Soorajnallusamy@VigneshShivN @manobalam @makapa_anand @PMohan93 @MAmuthavan
Waiting for all?? pic.twitter.com/nGziUtx6R3
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com