அதிகாலை முதல் நள்ளிரவு வரை.. சிம்பு, த்ரிஷாவிடம் பம்பரமாய் வேலை வாங்கும் மணிரத்னம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை மணிரத்னம் படப்பிடிப்பை நடத்தி வருவதாகவும் இந்த படப்பிடிப்பில் சிம்பு மற்றும் த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகம் படமாக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் கசிந்து உள்ளது.
மணிரத்னம் படம் என்றாலே இருட்டாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில் பொதுவாக அவரது படத்தின் படப்பிடிப்பு ஒன்று அதிகாலை அல்லது இரவு நேரத்தில் படமாக்கப்படும் என்றும் கூறப்படுவதுண்டு.
அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் சென்னையில் படப்பிடிப்பு நடத்திய மணிரத்னம் நேற்று அதிகாலை 5 மணி வரை படப்பிடிப்பு நடத்தியதாகவும் சிம்பு மற்றும் த்ரிஷா சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மணிரத்னம் படத்திற்காக சிம்பு மற்றும் த்ரிஷா ஆகிய இருவரும் நேரம் காலம் பார்க்காமல் கால்ஷீட் கொடுத்து அர்ப்பணிப்பு உணர்வுடன் நடித்து வருவதாகவும் அவர்கள் இருவரும் ரொமான்ஸ் காட்சி கவிதை போல வந்திருப்பதாகவும் ஸ்கிரீனில் பார்க்கும்போது மிகவும் அழகாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
சிம்பு என்ட்ரி ஆனவுடன் ’தக்லைஃப்’ படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள நிலையில் பிசினஸ் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. எனவே கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆகிய இருவருக்கும் இந்த படம் திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, நாசர், அலி ஃபைசல், பங்கஜ் திரிபாதி, அசோக் செல்வன், ஜோஜு ஜார், ஐஸ்வர்யா லட்சுமி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை ஆர் மகேந்திரன் மற்றும் சிவா ஆனந்த் அவர்களும் இணைந்து தயாரிக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments