சிம்பு, மகத் லேட்டஸ் ஆன்மீக வீடியோ: இணையத்தில் வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதும், அவர் நடித்து வரும் ’மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை கோவிலுக்கு சிம்பு சென்றுள்ளார் என்பதும் அவர் திரும்பி சென்னை வந்ததும் ’மாநாடு’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சிம்புவுடன் ஐயப்பன் கோவிலுக்கு அவரது நெருங்கிய நண்பரான நடிகர் மகத்தும் சென்று உள்ளதாக தெரியவருகிறது. சிம்புவும் மகத்தும் கோவில் ஒன்றின் கெளசாலாவுக்கு சென்ற ஆன்மீக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கெளசாலாவில் வளர்ந்து வரும் கோவில் மாடு ஒன்றுக்கு சிம்புவும் மகத்தும் வாழைப்பழம் ஊட்டுவது குறித்த காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளன என்பதும், இந்த வீடியோவை சிம்பு ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#SilambarasanTR visits #gaushala along with @mahatofficial and seeks blessings. #STR #Atman #simbufans @SilambarasanTR_ #Eeswaran #Maanaadu pic.twitter.com/mxkd15qm0O
— Hariharan Gajendran (@hariharannaidu) December 31, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments