சிம்புவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி!

  • IndiaGlitz, [Tuesday,August 24 2021]

சிம்பு நடிப்பில், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகிய திரைப்படம் ’மாநாடு’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் வரும் ஆயுத பூஜை தினத்தில் இந்த படம் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிம்பு தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சிம்பு கௌதம் கார்த்திக்குடன் ’பத்து தல’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சிம்பு, ஹன்சிகா நடித்த ‘மஹா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி சிம்பு நடிப்பில் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாக உள்ள ’கொரோனா குமார்’ என்ற படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அனேகமாக இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 25ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ‘மஞ்சப்பை’ இயக்குனர் ராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ஒரு படத்தின் அறிவிப்பும் விரைவில் வரவுள்ளதாக கூறப்படுகிறது.

சிம்புவின் அடுத்தடுத்த படங்களின் அப்டேட்டுக்கள் வந்து கொண்டிருப்பது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

ஒரே படத்தில் கமல், விக்ரம், விஜய்சேதுபதி? 

ஒரே படத்தில் கமலஹாசன், விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய மூவரும் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது கோலிவுட் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தங்கையை திருமணம் செய்த பிரபல வீரர்… சமீபத்திய புகைப்படத்திற்கு குவியும் வாழ்த்து!

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த பிரபல மோட்டார் சைக்கிள் வீரர் மிக்குவேல் ஒலிவ்வேய்ரா.

 தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் பதவி விலகல்… பாலியல் சர்ச்சை காரணமா?

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளராக இருந்துவரும் கே.டி.ராகவன் தன்னுடைய பதவியில் இருந்து விலகிவிட்டதாகப்

சென்னையில் நில அதிர்வு: அதிர்ச்சி தகவல்

சென்னையின் ஒரு சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அமெரிக்காவின் லட்சணம் இதுதான்… செய்தி வெளியிட்டு பரபரப்பை கிளப்பும் ஊடகம்!

ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவை விமர்சித்து சீன அரசு ஊடகம் பரபரப்பு செய்தி வெளியிட்டு உள்ளது.